ஒலி வடிவில்உனக்கும் காதல் வரும்
பைத்தியமாய் அலையும் என்னையும் - பிடிக்கும்
உனக்கும் கண்கள் அழகாய் தோன்றும்
காதலிக்கும் காதலன் மட்டும் என்ன விதிவிலக்கா ?
நிலவை ரசிக்க தோன்றும் - என்ன
நான் எழுதும் கவிதை மட்டும் இல்லையா ?
நாட்கள் விரைந்தோட நினைக்கும்
நினைவுகள் நிறுத்தும்
நாளை பார்க்க தோன்றும்
வாரங்கள் போக சொல்லும்
நினைவுக்கு வரும் என்னை
காத்திருக்கவும் தோன்றும் என்னைப்போல
கண்ணாடி பார்க்க தோன்றும்
கண்கள் என்னைப் பற்றியே சொல்லும்
கடிகாரம் பார்க்கத் தோன்றும்
நிமிட முள் என்னையே காட்டும்
வகுப்புக்கு போக தோன்றும்
வீதிகளில் என் நினைவுகள்
கொல்லும்
கால்கள் தெருக்களைக் கூட்டும்
தனிமையில்
நான் இல்லை
என்றும் தோன்றும்
நான் சொன்னவை உன் மனவானில்
தோன்றுகிறதோ....
அப்பொழுது அழை
நான் உனக்காய் வருகிறேன்.
ஒலி வடிவில்.மாறன்.: