Friday, December 28, 2007

கண்ணீருக்கு பதில்




பிரிவென்று தெரியவில்லை
பிரிந்து போக நீங்கள்
உடலும் இல்லை

எப்போதும் எங்கள்
மூச்சுக் காற்றின்
முகவரியாய்

நாங்கள் நடந்து
போகும் நாட்களாய்
நாளிதழின் பக்கமாய்

விடாது துடிக்கும்
எங்கள் இதயமாய்
கால் படும் பூமியாய்

ஆதவன் சந்திரன்
இரண்டுமாய் உங்களை
காண்கிறோம்

தந்தையே உங்கள் பிரிவுமட்டும்
பொய் நீங்கள் எங்களுடன்
எப்போதும்

மறையாது நிற்கிறீர்கள்

கண்ணீர் மட்டும் நாம் சொன்னால்
அழுகிறது எங்கே எங்கள்
அப்பா என்று ஃஃஃஃ

ஒருமுறை சொல்லுங்கள்
நீங்கள் எங்களுடன்
என்று …………

Thursday, December 27, 2007

நான் வரமுடியவில்லை





ஒலி வடிவில்

வார்த்தைகள் இருந்தும் வாரங்கள் கடந்தும்
நான் வரமுடியவில்லை ஆனாலும் நான்
நனைத்தை கண்ணீருடன் உறைந்த வார்த்தைகள்
உன்னை என்னிடம் வரச்சொல்லும்

இரவுகள் இருண்டும் பகல்கள் வெளிச்சும்
வெளிவராத உண்மைகளை நீ சுமக்க
நான் உன்னையும் சுமக்க - என் இதயம்
வலிக்கின்றது உனக்கு தெரியவில்லையா

இருவாரங்களில் இரு விழிகாட்டி என்னை
உன்னுடன் இறுக்கி அனணத்தவளே
இன்று இரு மாதங்கள் ஆகியும்
மௌனமாய் இருப்பது ஏன்

ஒலி வடிவில்


.: மாறன் :.

என்னை காதலிப்பாயா




ஒலி வடிவில்

நாட்களை மறந்து நடந்து செல்கிறேன்
நாளை உன் உறவுகளுக்காய் - என்னையே
தருகிறேன் - இன்று நீ
என்னை காதலிப்பாய் என்றால்

கொடுத்துவிட்டேன் என்னையே
தினம் தினம் உன் மௌனம்
மட்டும் கொழுத்தி செல்கிறது – எனக்குள்
இருக்கும் உன்னையே

ஒருவேளை நான் உன்னை
மறக்க நினைத்தால் - தயவுசெய்து
இந்த பூமி என்னை
இழந்துவிடும்

என்னை காதலிப்பாயா என் காதலியே…


ஒலி வடிவில்

.: மாறன் :.

தூது செல்வாயா




அழகு நிலவே எனக்காகத் தூது செல்வாயா !
நான் சொல்லி புரியாதா காதலைப்
புரிய வைக்க செய்வாயா !

நினைவுக்கு வருகிறது.. நீ அவளை
கடக்கும் போது சொல்

நான் அவள் வருகைக்காக காத்திருக்கிறேன்
என்றும்!! தினம் தினம் அவள் நினைவுகள்
என்னை கொள்கிறது என்றும்

பார்க்கும் உருவமெல்லாம் அவள் வடிவாக
இருப்பதாகவும், அவள் சிரிப்பும் முறைப்பும்,
பேச்சும் இல்லாமல் வீதிகளும் என்னுடன்
உறக்கம் இன்றி தவிக்கிறது என்றும்
அந்த கோபக்காறியிடம் சொல்

என்னொன்று மறந்து விடாதே நிலவே
அவள் கண்கள் அழகாக இருக்கிறது
என்றும் அவளிடம் கூறு…………….

மற்றது என்னவளை கடக்கும்
போது நீயும் மயங்கி விடாதே

.: மாறன் :.

(நீ கடல்கடந்த போது )

நீ என் காதலியோ




பிரிவிலும் சிரிக்கிறேன்
சொல்லித் தந்தவள் நீ தானே
சிரிப்பிலும் அழுகிறேன்
கற்றுத் தந்தவள் நீ தானே

தேடித் தேடி அலைகிறேன்
தொலைந்து போனவள் நீ தானே
விடைகள் இன்றதித் தவிக்கிறேன்
எனது கேள்விகளும் நீ தானே

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
தெருக்களை அமைதியாக்கிவள் நீ தானே
நேற்றுகளை இன்று ஆக்கினேன்
நாளைகளை வரவைத்தவள் நீ தானே

தினம் தினம் சாகிறேன்
உயிர்த்திட வருபவளும் நீ தானே
நீ என் காதலியோ

.: மாறன் :.

Saturday, December 1, 2007

Thursday, November 15, 2007

கடந்த திங்கள்




ஒலி வடிவில்

உனக்காய் காத்திருந்தேன்
நீ வருவாதாய் சொன்னதாய்
நினைத்து
வருகையில் என்ன செய்வது
என்றும் நினைத்து கொண்டு
இருந்தேன்
அந்த மாலை நேரம்

சற்று சற்றாய் வானம்
இருட்ட நீ வருதாய்
மனதிற்க்குள் நினைத்து
பரவசப்பட்டேன் - சூரியனும்
எனக்கு விடைகொடுத்தது

நிலவும் என் கற்பனைக்கு
வெளிச்சம் கொடுத்தது
அந்த மஞ்சள் தெருவிழக்கின்
நிழலலாய் நான் நின்று
கொண்டிந்தேன்

மணிநேரங்கள் செக்கன்களாய்
சென்றன ஆனால் அந்த
பல மணிநேரமும் என்னுடன்
தெருவும் உன் வருகையின்றி
வாடி இருந்தது

கற்றுக் கொண்டேன் காதலில்
காத்திருப்பதன் இன்பத்தை
கற்று தந்தவள் நீயும்
என்றும் தெரிந்து கொண்டேன்

புரிந்தது கொள் என்
புன்னகைக்கும் நேரங்களிலும்
என் அழுகையின் சத்தத்திலும்
நீ மட்டும் தான் என்று

இன்று நீ வரவில்லை
என்று நான் உணரவில்லை
காரணம் எனக்கு என்றும்
மழுநாட்கள் முடிந்தாய்
தோன்றியதில்லை

என் வாழ்கையில் வரயிருக்கும்
எத்தனையோ திங்கள்கள்
அதில் ஒரு திங்கள்
உனக்கும் என்னை காட்டும்

நான் காத்திருக்கிறேன்

காதலி உன்னையும்
காதலையும் சுமந்து கொண்டு
கடந்த திங்களுக்கு விடை
கொடுத்து

வரும் திங்களுக்காய்

ஒலி வடிவில்

Tuesday, October 30, 2007

தோழனுக்கு On Oct 30th



எனக்கு தோழனாய்
என் தோழிக்கு
இதயம் கொடுத்தவனே

தோன்றும் நல்லாளிலே
உன்னனை அறிமுகம்
செய்த அன்னைக்கு
நன்றி சொல்லி

இன்று உனக்காய்
நான் வாழ்த்து
சொல்கிறேன்

அன்பானவனே என்
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்

நினைத்தவை இனிதே
நிறைவேறும் உனக்காய்

மீண்டும்

HAPPY BIRTHDAY TO YOU

Sunday, October 21, 2007

உன் மனவானத்தில் தோன்றுகிறதோ




ஒலி வடிவில்

உனக்கும் காதல் வரும்
பைத்தியமாய் அலையும் என்னையும் - பிடிக்கும்
உனக்கும் கண்கள் அழகாய் தோன்றும்
காதலிக்கும் காதலன் மட்டும் என்ன விதிவிலக்கா ?

நிலவை ரசிக்க தோன்றும் - என்ன
நான் எழுதும் கவிதை மட்டும் இல்லையா ?
நாட்கள் விரைந்தோட நினைக்கும்
நினைவுகள் நிறுத்தும்

நாளை பார்க்க தோன்றும்
வாரங்கள் போக சொல்லும்
நினைவுக்கு வரும் என்னை
காத்திருக்கவும் தோன்றும் என்னைப்போல

கண்ணாடி பார்க்க தோன்றும்
கண்கள் என்னைப் பற்றியே சொல்லும்
கடிகாரம் பார்க்கத் தோன்றும்
நிமிட முள் என்னையே காட்டும்

வகுப்புக்கு போக தோன்றும்
வீதிகளில் என் நினைவுகள்
கொல்லும்
கால்கள் தெருக்களைக் கூட்டும்
தனிமையில்

நான் இல்லை
என்றும் தோன்றும்

நான் சொன்னவை உன் மனவானில்
தோன்றுகிறதோ....
அப்பொழுது அழை
நான் உனக்காய் வருகிறேன்.

ஒலி வடிவில்


.மாறன்.:

Thursday, October 4, 2007

சொல் வாழ் நாள் முடிவுக்குள்



ஒலி வடிவில்

நினைக்கின்ற நிமிடங்களை
உனதாக்கினாய் எனக்கென்று
ஒரு செக்கனில் கூட
என்னை காதலிக்க வில்லையா

பார்க்கின்ற பார்வையால்
நீயானாய் உன் கண்களின்
வெளிச்சத்தில் நான் மட்டும்
இருளா

பேச்சுக்கிளில் உன் பெயர்களை
உச்சரிக்க வைத்தாய்
என் அருகில் உன் பெயர்
எழுத ஒரு தடையேனும்
விரல்கள் முனையவில்லையா

நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவளைத்தாய்
ஏன் எனக்காய் நீ
ஒரு தடையேனும் காத்திருக்க
வில்லையா

வேண்டாம் நான்
ஒன்றும் உன்னிடம் கேட்டு
உன்னை துன்புறுத்தவில்லை

மனதை தொட்டு சொல்
உனக்கு என்மேல்
காதல் வரவில்லையா

இந்த கிறுக்கனின்
கிறுக்கல்கள் கூட
உன் இதயத்தில்
என் பெயரை
கிறுக்கவில்லையா

சொல்
என் வாழ் நாள்
முடிவுக்குள்

ஒலி வடிவில்


:.மாறன்.:

கனவுக்குள் களவு




ஒலி வடிவில்


கல்லூரி வாசலில்
வேகமாய் மாணவர் கூட்டம்
இடையில் இவள் மட்டும்
தன்னை மறந்து
தனக்குள்ளே என்னைச்
சுமந்து

சாலையின் மஞ்சள் கடவையில்
எனக்கு முன்னே தரிசனம்
தருகிறாள்

விழிகள் வியந்து
என்னை பார்க்க
கள்ளி அவள் என்னை
கொள்ளையிட்டால்

என்னையும் இவளையும்
விடைகொடுக்கச் சொல்லி
கல்லூரி மணி ஒலிக்க

தோழி உடன் அழைக்க
என் மனம் வேண்டம்
என்று சொல்ல
விழிகளால் மட்டும்
வருகிறேன் என்று
செல்லிகிறாள்
சின்னவள்

அழகான குட்டையான
கூந்தல் தலையாட்ட
சிரித்துக் கொண்டே
அவள் விழிகள்
இமைக்காது என்னை
பார்க்க

தொலைத்துவிட்டேன்
என்னை அல்ல என்
இதயத்தை


இவளுக்கு விடைகொடுக்க
என் கரங்கள் கையசக்க
யன்னல் திறந்து
தென்றல் தட்டி
கனவு என்றதும்

கூடவே நியம் என்று
சூரியன் என்னை சுட்டும்
சொல்லிட்டு
தெரிந்து கொண்டேன்
கனவுக்குள் களவு என்று

இன்று அத் தெடருக்காய்
வருடமாய் காத்திருக்கிறேன்
என் இதயத்தை கேட்க
அல்ல என்னையும் அவளுடன்
திருடிச் செல்ல சொல்லா

ஒலி வடிவில்


:.மாறன்.:

Wednesday, October 3, 2007

தோழிக்கு… On Oct 03rd




எனக்கு தோழியாய்
என் தோழனனுக்கு
இதயம் கொடுத்தவளே

தோன்றும் நல்லாளிலே
உன்னனை அறிமுகம்
செய்த அன்னைக்கு
நன்றி சொல்லி

இன்று உனக்காய்
நான் வாழ்த்து சொல்ல
நண்பனக்கிய இணயைமும்
இணனைந்து சொல்கிறோம்

அன்பானவளே எங்கள்
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்

நினைத்தவை இனிதே
நிறைவேறும் உனக்காய்

மீண்டும்

HAPPY BIRTHDAY TO YOU

என்க்கு காதல்….



கண்கள் பார்த்தேன் காதல் வந்தது
காதலித்தேன் கவிதை வந்தது
என்னயா பர்க்கிறாள் என்றேன்
என் நண்பனிடம்

காற்றில்லா இடத்திற்க்கும் போவேன்
என்றேன்
காதலிக்க அவள் மட்டும் இருந்தால்
போதும் என்றேன்

பெயர் தெரியாமல் தவித்திருந்தேன்
நண்பன் கிடைத்தான் அவன்
காலத்தை கரைத்த்துவிட்டேன்

கண்ணாடி பாக்கதோன்றிற்று
காலையில் அவள் நினைவும்
வந்திச்சு
பசிக்வில்லை என்றேன்
அவள் மட்டும் போதும்
என்றேன்

என் வீட்டுக் கடிகாரம்
அவள் வரும் நேரங்களில்
மட்டும் ஓடிற்று
கனவுகள் வந்நததும்
முடிவில் அவள் சிரித்தாள்
என்றேன்

படுக்கை அறையில் தலையனிக்கு
பதிலாய் செல்போன்களாகிற்று
அடிக்காதக ஒலிக்காய்
" Hello " சொன்னதுண்டு

பள்ளி போக பிடித்தது
இடைவெளியில் இறுக்கி
கண்முடி அவளை
நினைக்க தோன்றிற்று
கண்கள் கண்ணடிச்சுற்று

சிரிப்பும் வந்ததுண்டு கேட்டால்
அவள் என்றேன்
என்னடா என்றால்
தயக்கமும் தோன்றிற்று

மரநிழலில் நிற்கத் தோன்றிற்று
மரமாய் நானனாக மாற
நினைத்ததுண்டு அவளுக்காய்

ம்ம்ம்ம
இவை எனக்கு தோன்றிற்று
உங்களுக்கு ......

:.மாறன்.:

Friday, September 21, 2007

நான்... குடை...அவள்...




அன்று….

தூரளில் அவள் குடைபிடிக்க
அவளருகில் நான் - வருவதால்
அவள் குடை மடித்தாள்
இருவருமே நனைவோம் என்று

சற்று மழைபெருக்க
நான் நனைவேன் என்று
குடைவிரித்தாள்
அந்த இரவுத் தூரளில்

முதன் முதல் குடைக்குள்
நான் என்பதை மறந்து
அவளுடன் தொலைத்தேன்
என்னை

அவள் என்னைப் பார்த்த முதல்
இடம் எது என்று கேட்டதும்
சற்று விழையாட்டாய்
School முடிந்ததும்
என்றேன்

ஏன் என்னைப் பிடித்தது என்றதும்
பார்த்ததும் பிடிக்கவில்லை
என்றேன்

அவள் முகம் என்னைப் பார்க்க
தெருவிழக்கின் மஞ்சள் ஒளியில்
தெரிந்த அவள் கண்கள்
மட்டும் தான் பிடித்தது
என்றேன்

சிரிப்பில் அவள் முகம் சிவக்கக்
கண்டேன்

அவள் வீடு அண்மிக்க
நான் நனைவேன்
என்று மழை
பெருக்க முன் வீடு
போகச் சொன்னவளே

புரிந்து கொண்டேன்
அன்று அவள் எனக்காய்
குடைபிடித்து நடந்தாள்
என்று

இன்று…..

கொட்டும் மழையில்
அவளிடம் கெஞ்சுகிறேன்
அவள் குடைக்குள் -அவள்
மட்டும் மறைந்து
குடை மட்டும் தெரிகிறது


மழையில் நனையும்
என்னைக் குடைக்குள்
அவள் அனைக்கவில்லையே

சிலவேளை அவள்
மனதில் இருக்கும்
நான் நனைந்துவிடுவேன்
என்று அவள் தனக்கே
குடைபிடிக்கிறாள் போல்.....


:.மாறன்.:

Sunday, September 16, 2007

பவித்திரமானவளே….




நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறாய்
நீ நினைப்பதைச் சொல்ல மறுக்கிறாய்
என் காதலை ஏற்றுக்கொள்ளத் தவிக்கிறாய்
மறுதடவை என்னையே நினைக்கிறாய்

என் பேச்சை மறுத்து
தனிமையாக்கி தனிமையில்
செல்கிறாய் தவிக்கிறேன்
உன் மௌன வார்த்தை புரியாமால்

கற்றுத்தா கற்றுக்கொள்கிறேன்
மௌனமொழியை என் காதலை
உன்னிடம் உணர்விக்க

பவித்திரமானவளே என்ன
உன் பெயரும் பவி என்றோ
ஆரம்பிக்கின்றது

நான் நிக்கிறேன் நீ நடக்கிறோய்
சற்று திரும்பிப்பார் என்னை அல்ல
நினைவுகளையும் நான் தனிமையாய்
தவித்த நாட்களையும்

பவித்திரமானவளே சொல்லிவிடு.....

:.மாறன்.:

Tuesday, September 4, 2007

சுவரொட்டியாய்



ஒலி வடிவில்

சாலை ஓரமாய் சாய்ந்திருக்கிறேன்
சுவர்களோடு சுவரொட்டியாய்
செய்தி சொல்லிக் காத்திருக்றேன்

கண்மணி உன் கடைகண்களால்
பார்த்து விடு உயிர் பெற்று
உயிர் தருகிறேன் உனக்காய்

சுடும் வெய்யிலும் கொட்டும்
மழையும் சாலை ஓரம் என்னைத்
தீண்டி செல்கிறது தெரியவில்லை

உன் ஓரப்பார்வை
செல்ல சிரிப்பு அன்புக்
கோபமும் செல்ல நடையும்
மட்டுமே தெரிகிறது

சாலையின் சுவரே சற்றுப் பொறு
சத்தியமாய் சொல்கிறேன் என்
காதலி என்னைக் கூட்டி செல்வாள்

இன்று மட்டும் நான் உன்னுடன்
சுவரோட்டியாய் இருக்கிறேன்

.: மாறன் :.

என்னோடு நீ இருந்தால்




கண்மூடிக் கண்மணியே
நீலவுக்ககுக் கூட்டிச் செல்வேன்
காற்றோடு கதை பேசி
காதோடு இசை பாடி
பக்குவமாய்ப் பார்திடுவேன்

பைத்தியமாய் நான் இருப்பேன்
உன் மீது மட்டும்
நீ அடித்தாள் அழுதிடுவேன்
அன்பான உன் மடிமீது சாய்திடவே

ரோஜா நீ என்பேன்
இல்லை என்றால்
நான் என்பேன்
நீ சினுங்கும் செக்கன்களை
நான் ரசிப்பேன்

ஒன்று மட்டும் நீ
என்னை மட்டும் காதலித்தால்
நானும் உன்னை மட்டும்
என்னருகில் வைத்திருப்பேன்

என்னோடு நீ இருந்தால்

.: மாறன் :.

Wednesday, August 29, 2007

ஊமை காதலி


உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது

உன் காதலுக்காய் காத்திருந்தேன்
கற்பனையை கடந்திருந்தேன்
காதலி நீயும் ஏன் என்னை
கடந்து சென்றதேனா

கால்கள் வலிக்கும் நேரம் வரை
கண்களில் கண்ணீர் கரையும் வரை
கள்ளி காத்திருக்கிறேன்
உன் காதல் கனியுமென்று

இன்றும் இருக்கிறேன்
விரைவில் தொலைபேசி
அழைக்குமென்று...

.:மாறன்:.

பிரிவு



ஒலி வடிவில


பிரிவதை விட பிரிக்கப்படுவதன்
வலியே ஆதிகம் - நானும் இன்று
பிரிக்கப்பட்டவன் தான் -
காரணமின்றி...

காத்திருக்கும் கணத்தில்
கள்ளி அவள் மறைந்தாள்
நானும் அன்று – நினைத்தேன்
காரணம் இல்லை என்று

நிமிசங்கள் நின்று நீ
எங்கே என்றன...
வாரங்களும் வார்த்தையால்
விடைபெற்றன..

அன்பு நீ எனக்கு
நான் உனக்கு என்ற
உண்மை மறைக்கப்டுவதை
நான் ஏற்க மாட்டேன்
நீயும் நானும் பிரிக்கப்படுவதையும் கூட...

ஒலி வடிவில

.: மாறன் :.

1:35 மணி





நினைத்து நினைத்து பார்க்கிறேன்
அந்த ஒரு நிமிடத்தை
நின்று சிரித்த உன் முகம்
பார்க்க

கடிகாரத்தை கெஞ்சினேன்
கெதியேன்று போகச் சொல்லி
கள்ளி உனனை நான் பார்க்க
அந்த 1:35 மணிக்கு

பாடசாலை மணியிடம் மன்றாடினேன்
பாவை உன்னை பார்க்க ஒரு முறை
அடிக்குமாறு

நினைவுக்கு வந்தது நீ என்னை பார்த்த
முதல் மணி நேரமும் 1:35 மணி தான்
என்று

அன்று ஓடாத கடிகாரம் இன்றும்
என் வீட்டில் 1:35 மணியைத்தான்
காட்டுகிறது என்றும் உன் முகம்
பார்கக சொல்லி

.: மாறன் :.

என் குடும்பம்




தாய் மடி உறங்கி -தந்தையிடம்
அடி வாங்கி காலையில்
எழும்பகிக் கல்லூரி செல்ல -முன்

கள்ளமாய் தங்கை அறை
சென்று தூங்க அவள் -துரத்த
அண்ணன் அனைக்க - நான்
களைப்பேன் என் உறங்கலை

என் பாடம் முடிய பாவம்
தாய் பசி இருப்பால் என்று
விரைந்து நான் வர

அன்பு அழைப்பால் வீடு வர
சீனுங்கலாய் நான் இருக்க
என்னை அடித்து என் அன்னை
எனக்கு உணவுட்டுவாள்

பின்னேரம் பொய் சொல்லி
நான் வெளியேற - தந்தை
வர முன் வீடுவர - அன்னை
சொல்ல நான் சொன்ன
பொய் எனை சிரிக்கும்

மாலைவர அண்ணன் சொல்லில்
தந்தை முகம் முதல்
கடிகாரம் வரை
அவன் பேச்சில் சிரிக்கும்

நேரம் போகும் மதி இரவாகும்
தந்தை உறுக்க நாம்
செல்வோம் உறங்க
அண்ணன் அடிக்க - நான்
அழுவேன் தந்தை
அனைப்பில் நான் உறங்குவேன்

.: மாறன் :.

Tuesday, August 21, 2007

என் உயிர் காதலி



இதயத்தின் நான்கு அறைகளிலும்
ஆழகி உன் புகைப்படங்கள்
பதியப்பட்டு கிடக்கின்றது
சுழலும் என் குறுதியும் ஓரு
முறை உனைப் பார்கக வேண்டும் என்று

நான் சுவாசிக்கும் சுவாசக்காற்றினை
சுவாச அறைகள் நிறுத்தி
என் காதலுக்காய் தூது செல்லக் கேட்கின்றது
நீ அவற்றை சுவாசிக்கும் போது
சொல்லவும் சொல்கின்றது

ம்ம்ம்
இன்று நான் உன்னைப்

பார்க்க வருவதில்லை
தினம் தினம் உன் வருகைக்காய்
காத்திருப்பதும் இல்லை

காரணம்

என் உயிரை காக்கும் என்
இதய அறைகளும் சுவாச அறைகளும்
உனையே நினைப்பதால்

புரிந்து கொள் உன்னை விரும்புவது
நான் எனக்குள் இருக்கும் என் உயிர்
இதனால் தான் நீ எனக்கு என்றும்
என் உயிர் காதலி

.: மாறன் :.

Wednesday, August 15, 2007

கண்ணம்மா





கண்ணம்மா பாரதிக்கு
காதலன் நான் உனக்கு
கண்களில் காலம் தான் காட்டிடுமா!
உன் மௌனம் தான் நம் காதல்
சொல்லிடுமா!

என் உயிர் தான் உனக்கு
என் காதல் எனக்கு மட்டும் தான்
கண்ணம்மா காலம் போகலாம்
காதல் கரைந்திடுமா!

காற்றிலே கவிதையாய்
கண்களில் கண்ணீரயா
காதல் என் காதல்
உரைத்திட

காலையில் காத்திருப்பேன்
கல்லூரி செல்லவல்ல
கண்ணம்மா உன் குரல்
கேட்டிடவேய்

நீ பதில் சொல்
நான் பாத்திருப்பேன்
உன் காதலுக்காய்
இல்லை இல்லை என்
காதலுக்காய்!!!

.: மாறன் :.

நீ வருவாயா……







காதல் கடலிலே காத்திருக்க
சொன்னவளே
குளிரிரும் நிலவும் குளிர்காய
சொன்னது - கூடவே
உன்னவள் உனக்குதான்
என்றது.

வார்த்தைகளும் இனிக்க
தொடங்கியது…
நாட் குறிப்புக்கள் நகல்கள்
ஆகியது.

இரவும் இனிதே இனித்தது
உன் கனவுப் பார்வைகளால்.
ஏன் என் கனவிலே மட்டும்……

சுடும் சூரியன் வந்தும்
நீ வராமல் போனதேன்…
ஏன் நீ இரவில் தெரியும்
நிலவா இல்லை கோபமா…..

.:மாறன்:.

உயிர்த்திடேன்…



ஒலி வடிவில்

காதல் சொல்லிட வார்தை இல்லை
உன் மொளனம் என்னை கொல்லுதடி
நான் தனிமையில் தவிப்பது உனக்கு புரியாதோ…

நான் உன்னை பார்த்த பின்பு தான்
காதலுக்காய் காத்திருந்தேன்
என்று உனக்குத் தெரியாதோ…

காதலுக்காய் உயிர் வாழ
உன் உள்ளம் எனைத் தேடதோ…
கண்ணே நாம் இருவரும் கலந்திட
காற்றே உன்னை கேட்காதோ…

என் தேகம் விட்டு பிரிந்த உயிரை
உயிர்த்திட நீ வருவாயோ…
உண்மையுடன்
நான் உன்னை
காணாமல் உயிர்த்திடேன்…

ஒலி வடிவில்

.: மாறன் :.

பதில் சொல்வாயா



ஒலி வடிவில

கவிதை எழுத முயற்ச்சிக்கிறேன் - கண்ணீரும்
என் முன்னால் வந்து என்னவள் எங்கே என்கிறது..
வார்த்தைகளை நான் தேடி - புத்தகத்தை
நான் புரட்ட - தாழ்களில் நான் வரைந்த
உன் கண்கள் என்னை பார்த்து
விழி மூடுகின்றன

சரி கவிதை எழுத வேண்டாம் என்று
எழுந்து நிற்க என் கால்கள்
என்னை கேட்கிறது உன்னவளுக்காகவா
காத்திருக்கிறாய் என்று..

மொளனமாய் நான் என் மெத்தையில்
இருக்க கடிகார முள் தான் சுற்றுவதை
ஒருகணம் நிறுத்தி - உன்னவள் வரும்
நேரம் சொல்…நான் நினைவுபடுத்துகிறன் என்கிறது

இறுதியில் நீ வருவாய் என்று கூறி நான்
நித்திரைக்கு செல்கிறேன்…காரணம்
கனவிலாவது பதில் சொல்வாய்
கண்மணி நீ என்று…

ஒலி வடிவில

.: மாறன் :.

Monday, August 13, 2007

இவன் இவளுக்கு எழுதுவது…..






இவன் இவளுக்கு எழுதுவது…..

எழுதுவது வார்த்தைகள்
எழுந்து நிற்பது என் காதல்.
ஏக்கங்கள் எனக்கா ?
ஏமாற்றங்களும் எனக்கா?

தேவதை
தேடல்கள் தொடர்ந்தும்
தேடினேன் நீ
இல்லை
பார்வைகளும்
பார்ப்பதற்க்கு விழிகளும்
இல்லை
பாவம் தெருக்களும்
என்னுடன் தேடுகின்றது……

இவன் இவளுக்கு
என்று சொன்னவர்கள்
இன்றும் சொல்ல
மறந்ததது ஏனோ
பாவம் நானோ…இல்லை
என் காதலோ
பாhக்கவில்லை
உன் விழிகளையும் விழியின்
பார்வைகளையும்……

தென்றலை நான் தேடியபோது
தோன்றிய தேவதை நீ
விழிகளின் பார்வையால்
பட்டு போனவன் நான்
பாராமல் நீ போனதேன்……

பைத்தியமாய் அலைகிறேன்
பாதி நேரம் தாய்க்கு பிழ்ளையாய்
மீதி நேரம் உனக்கு காதலனாய்
காத்திருக்கிறேன்….

.: மாறன் :.

முதன் முறை




ஒலி வடிவில்

முற்சந்தியில் நீ நிற்க
முன்று நிமிடங்களை நான் தொலைத்தேன்
உன் முதற் பார்வையில் - முதன் முறையாய்

ஒருநிமிடம் பார்த்த முதல் முகம்
இருநிமிடம் ஈர்க்க வைத்த இருவிழிகள்
மறுநிமிடம் நினைக்க வைத்தது உன் முகம்

தொலைத்து விடுவேனோ என்னை
தொலைந்து விடுவளோ – என்னை விட்டு
போக நினைத்த கால்களை தடுத்த நாள்

அன்றுதான் நானும் முதன் முறையாய்
சுமந்தேன் உன்னை

ஒலி வடிவில்

.: மாறன் :.

இவளுக்கா நான்




ஒலி வடிவில்

என் கையில் காகிதம்
நீ கொடுத்த காதல் கடிதம்
சிரித்து படித்தேன் - விந்தையான
உன் வார்த்தைகளை

வியந்து போனேன் உன் வெண்மையான
காதலை நினைத்து – வெறுமையான
எனக்குள் சுமை ஒன்றினை உணர்ந்தேன்
அன்று தான் நானும் உன்னை சுமந்தேன்

இரவுகளில் உன்னையே நினைக்கிறேன்
காதலனே நீ கையில் கொடுத்த
காதல் மடலை - இறுக்கி அனைத்து
உறங்குகையில்

சொல்ல வருவேன் என் காதலை
நீ காத்திருக்கும் கணத்திலே
கள்ளி நான் இனி மறையமாட்டேன்
காதலனே காத்திரு – ஒரு நாள்
வருவேன்

ஒலி வடிவில்

.: மாறன் :.

Saturday, August 11, 2007

அவள் பார்வைகள் விந்தையானவை




ஒலி வடிவில்

ார்வைகள்
வி
ந்தையானவை

மெளனமான தெருக்கள்
அவள் வருகையால் - சிரிக்கிறது
கள்ளி ஏன் என்னை மட்டும்
காயப்படுத்தி முறைக்கிறாள்

தெருக்கானல்கள் அவள்
பார்வைகளால் நியமாகின்றன
என் கண்களில் கரையும்
கண்ணீர் மட்டும் ஏன்
அவளுக்கு நியமாகவில்லை

அவள் நாளையுடன் இன்று
கதைக்கிறாள் - ஏன்
நேற்று கூட அவள் பார்வை
என் மீது படவில்லை

ஏன் அவள் பார்வைகள் விந்தையானவையா
இல்லை நான் விந்தையற்ற மனிதனா

ஒலி வடிவில்

.: மாறன் :.

என் பேனாவும் தாள்களும்



எழுத்துக்களை மட்டும் பேனாவால்
எழுதத்தெரிந்த எனக்கு - இன்று
என்னை கொல்லும் உன் நினைவுகளையும்
பற்றி எழுதத் தோன்றுகிறது

என் பேனாக்களின் முனைகள் என்
புத்தக தாள்களின் மூளைகளில்
உன் பெயர்களை செதுக்குகின்றன

மைகள் உன் பெயர்களை வரைகின்றன
என் புத்தக தாள்களில் மையத்தில்
நான் ஆழுது வடித்த கண்ணீர் துளிகள்
உன் பெயருக்கு நீர் ஊற்றி குளிறுட்டுகின்றன

உன் பெயரின் அருகில்
என் பெயர் எழுதும்
என் பேனாக்களுக்கு இடம் கொடுத்த
புத்தக தாள்கள் கேட்கின்றது
உன்னை எப்பொழுது உன்னவள்
ஏற்றுக்கொள்வாள் என்று

பேனாவின் முடிவு அதனுள்
இருக்கும் மைகளில்
தாள்களின் முடிவு எழுத்துகளின்
எண்ணிக்கையில்.

என் காதலியே உன் பேச்சில் மட்டுமே
என் தெடக்கமும் முடிவும்

எனக்கு இப்பொழுது என்
போனாவும் தாள்களும் தான்
எனக்கு தூதுவர்கள்

.: மாறன் :.

Friday, August 10, 2007

என் - அவள்




ஒலி வடிவில்


குட்டை முடி குத்தும்
பார்வை! கொஞ்சும் கன்னம்
பார்த்தால் சிரிக்கும் முகம்
பார்வையால் வசிக்கும்
கண்கள் அவள்

அருகில் போனால் பயம்
நான் தனிமையாய் நின்றால்
சுகம் அவளுக்கு - அருகில்
அழைக்கும் கால்கள் (யாரும் இல்லையென்றால்)

சுட்டித் தனமான பேச்சு
கள்ளத்தனமான பார்வை
பல் இடைவெளிகளில்
ஒழிந்த சிரிப்புகள் – அவளிடம்

சட்டென்று பதில் - சற்று
யோசிக்கும் குணம் - இரண்டும்
அவள் நடையில் முன்பு
ஆமை இன்று express

என்னை மட்டும் பார்த்தால்

பிடிக்கவில்லையாம் என்னை
ஆனால் கள்ளமாய் பார்பாவாம்
முறைக்கிறேன் என்பாவாம்
நேரில் கதைக்க மாட்டாவாம்
Phone il மட்டும் கதைப்பாளாம்

நீண்ட பார்வை நியமாய்
அழகான கண்கள் - என்
கவிதைகளுக்கு சொந்தகாரி
யாரும் அல்ல கண்ணழகி

என்னிடம் கேட்பாவாம்
என்னை முதல் பார்த்த
இடம் எதுவென்று ?
சற்று அமைதியானால்
ஏன் என்னை மட்டும் பார்த்ததும்
பிடித்தது என்பாள்

நான் உன் கண்கள் என்றால்
வெட்கப்படுவாளாம் , சற்று
தலைகுனிந்து சிரிப்பாளம்

ஆனால் என்னை
பிடிக்கவில்லையாம்
நம்புங்கள் அவளை !!!

இவள் தான் என் - அவள்.
சொல்லவதற்கு அதிகம்
அவளிடம் மட்டும்

ஒலி வடிவில்

.: மாறன் :.

பதியாத சுவடுகள




சுத்தித் திரிந்த காலம்
காற்றிலே கதைத்தை கவிதைகள்
பாடசாலை கீதம் பாட
நான் உனை நினைத்து சிரித்த
நாட்கள்

பள்ளி முனையில் மர நிழலில்
தோழனுடன் நான் காத்திருந்த
நிடமிங்களும் ! நீ என்னை பார்த்து
நடந்த நாட்கள்

நிழலாய் நான் உனை தெடர்ந்த
நாட்கள் ! நீ இல்லை என்று
தெரிந்தும் எவரையோ நீ என்று
பார்த்து சிரித்த நிமிடங்கள்

வகுப்பு தொடக்கத்தில் வாசல்
வந்து ! வகுப்பின் முடிவு வரை
காத்திருந்து உனை ரசித்த
நாட்களும் நிமிடங்களும்

கோவில் தேடத என் கால்களை
தினங்களில் காக்க வைத்த
நிமிடங்களும் நாம் சிரித்த
நாட்களும்

ஏன் உன் மனதில் மட்டும் இவைகள்
பதியப்படாமல் போனது

.: மாறன் :.