
ஒலி வடிவில்
உனக்காய் காத்திருந்தேன்
நீ வருவாதாய் சொன்னதாய்
நினைத்து
வருகையில் என்ன செய்வது
என்றும் நினைத்து கொண்டு
இருந்தேன்
அந்த மாலை நேரம்
சற்று சற்றாய் வானம்
இருட்ட நீ வருதாய்
மனதிற்க்குள் நினைத்து
பரவசப்பட்டேன் - சூரியனும்
எனக்கு விடைகொடுத்தது
நிலவும் என் கற்பனைக்கு
வெளிச்சம் கொடுத்தது
அந்த மஞ்சள் தெருவிழக்கின்
நிழலலாய் நான் நின்று
கொண்டிந்தேன்
மணிநேரங்கள் செக்கன்களாய்
சென்றன ஆனால் அந்த
பல மணிநேரமும் என்னுடன்
தெருவும் உன் வருகையின்றி
வாடி இருந்தது
கற்றுக் கொண்டேன் காதலில்
காத்திருப்பதன் இன்பத்தை
கற்று தந்தவள் நீயும்
என்றும் தெரிந்து கொண்டேன்
புரிந்தது கொள் என்
புன்னகைக்கும் நேரங்களிலும்
என் அழுகையின் சத்தத்திலும்
நீ மட்டும் தான் என்று
இன்று நீ வரவில்லை
என்று நான் உணரவில்லை
காரணம் எனக்கு என்றும்
மழுநாட்கள் முடிந்தாய்
தோன்றியதில்லை
என் வாழ்கையில் வரயிருக்கும்
எத்தனையோ திங்கள்கள்
அதில் ஒரு திங்கள்
உனக்கும் என்னை காட்டும்
நான் காத்திருக்கிறேன்
காதலி உன்னையும்
காதலையும் சுமந்து கொண்டு
கடந்த திங்களுக்கு விடை
கொடுத்து
வரும் திங்களுக்காய்
ஒலி வடிவில்