Wednesday, March 26, 2008

கல்லறை வரைக்கும்



காத்திருந்து நாளாகிப்போச்சு
கண்மணியே கண்கலோரம்
கண்ணீராகிப் போச்சு

கவிதை எழுதி காலம்போச்சு
கல்லறைக்கு நான் போக
நேரமாகிப் போச்சு

நிலவோடும் என் இரவோடும்
இருண்டுபோன என் உலகோடும்
உயிர் இன்றி கிடக்கிறேன்

என்னைக் களவாடிப்போனவளே
என் கல்லரைக் கரையில்
ஒரு பூப் பூத்தும்

உன் மனதோடு என் முகம்
கொண்ட காதல் பூப்
பூக்கவில்லையே

கல்லறை வரைக்கும்
நான் சுமந்த காதல்
சுமையல்ல ஒரு சுகம்தான்

No comments: