Thursday, December 27, 2007

தூது செல்வாயா




அழகு நிலவே எனக்காகத் தூது செல்வாயா !
நான் சொல்லி புரியாதா காதலைப்
புரிய வைக்க செய்வாயா !

நினைவுக்கு வருகிறது.. நீ அவளை
கடக்கும் போது சொல்

நான் அவள் வருகைக்காக காத்திருக்கிறேன்
என்றும்!! தினம் தினம் அவள் நினைவுகள்
என்னை கொள்கிறது என்றும்

பார்க்கும் உருவமெல்லாம் அவள் வடிவாக
இருப்பதாகவும், அவள் சிரிப்பும் முறைப்பும்,
பேச்சும் இல்லாமல் வீதிகளும் என்னுடன்
உறக்கம் இன்றி தவிக்கிறது என்றும்
அந்த கோபக்காறியிடம் சொல்

என்னொன்று மறந்து விடாதே நிலவே
அவள் கண்கள் அழகாக இருக்கிறது
என்றும் அவளிடம் கூறு…………….

மற்றது என்னவளை கடக்கும்
போது நீயும் மயங்கி விடாதே

.: மாறன் :.

(நீ கடல்கடந்த போது )

No comments: