Wednesday, August 29, 2007

என் குடும்பம்




தாய் மடி உறங்கி -தந்தையிடம்
அடி வாங்கி காலையில்
எழும்பகிக் கல்லூரி செல்ல -முன்

கள்ளமாய் தங்கை அறை
சென்று தூங்க அவள் -துரத்த
அண்ணன் அனைக்க - நான்
களைப்பேன் என் உறங்கலை

என் பாடம் முடிய பாவம்
தாய் பசி இருப்பால் என்று
விரைந்து நான் வர

அன்பு அழைப்பால் வீடு வர
சீனுங்கலாய் நான் இருக்க
என்னை அடித்து என் அன்னை
எனக்கு உணவுட்டுவாள்

பின்னேரம் பொய் சொல்லி
நான் வெளியேற - தந்தை
வர முன் வீடுவர - அன்னை
சொல்ல நான் சொன்ன
பொய் எனை சிரிக்கும்

மாலைவர அண்ணன் சொல்லில்
தந்தை முகம் முதல்
கடிகாரம் வரை
அவன் பேச்சில் சிரிக்கும்

நேரம் போகும் மதி இரவாகும்
தந்தை உறுக்க நாம்
செல்வோம் உறங்க
அண்ணன் அடிக்க - நான்
அழுவேன் தந்தை
அனைப்பில் நான் உறங்குவேன்

.: மாறன் :.

1 comment:

Anonymous said...

ம்.. குடுத்துவைத்த தம்பி

நேசமுடன்..
-நித்தியா