Friday, August 10, 2007

என் - அவள்




ஒலி வடிவில்


குட்டை முடி குத்தும்
பார்வை! கொஞ்சும் கன்னம்
பார்த்தால் சிரிக்கும் முகம்
பார்வையால் வசிக்கும்
கண்கள் அவள்

அருகில் போனால் பயம்
நான் தனிமையாய் நின்றால்
சுகம் அவளுக்கு - அருகில்
அழைக்கும் கால்கள் (யாரும் இல்லையென்றால்)

சுட்டித் தனமான பேச்சு
கள்ளத்தனமான பார்வை
பல் இடைவெளிகளில்
ஒழிந்த சிரிப்புகள் – அவளிடம்

சட்டென்று பதில் - சற்று
யோசிக்கும் குணம் - இரண்டும்
அவள் நடையில் முன்பு
ஆமை இன்று express

என்னை மட்டும் பார்த்தால்

பிடிக்கவில்லையாம் என்னை
ஆனால் கள்ளமாய் பார்பாவாம்
முறைக்கிறேன் என்பாவாம்
நேரில் கதைக்க மாட்டாவாம்
Phone il மட்டும் கதைப்பாளாம்

நீண்ட பார்வை நியமாய்
அழகான கண்கள் - என்
கவிதைகளுக்கு சொந்தகாரி
யாரும் அல்ல கண்ணழகி

என்னிடம் கேட்பாவாம்
என்னை முதல் பார்த்த
இடம் எதுவென்று ?
சற்று அமைதியானால்
ஏன் என்னை மட்டும் பார்த்ததும்
பிடித்தது என்பாள்

நான் உன் கண்கள் என்றால்
வெட்கப்படுவாளாம் , சற்று
தலைகுனிந்து சிரிப்பாளம்

ஆனால் என்னை
பிடிக்கவில்லையாம்
நம்புங்கள் அவளை !!!

இவள் தான் என் - அவள்.
சொல்லவதற்கு அதிகம்
அவளிடம் மட்டும்

ஒலி வடிவில்

.: மாறன் :.

2 comments:

மாயா said...

நல்லாயிருக்கு
தமிழ்மணத்தில் Join பண்ணலாமே ?

மாறன் said...

thanks anna ...how can i join there? can u tell me the way to join....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி